திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் தஞ்சையில் உள்ள ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த இதய மருத்துவ சிறப்பு நிபுணர் இளங்குமரன் பெண்ணின் இதயத்துடிப்பு குறைவாக இருப்பதாகவும் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தார், மேலும் உறவினர்களின் ஒப்புதலின்படி பெண்ணுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டதில் அவருக்கு இதயத்துக்கு ரத்தம் வழங்கும் ரத்த நாளங்கள் செயலிழந்து உள்ளதை அறிந்து துரிதமாக தற்காலிக இதய பேஸ்மேக்கர் பொருத்தி உயிரை காப்பாற்றினார், மேலும் இதயத்தின் செயல்பாட்டை சரி செய்ய டாக்டர் இளங்குமரன் தலைமையிலான மருத்துவ குழுவை கொண்டு கேத் லேப் அரங்கில் உயர்தர உபகரணங்களை பயன்படுத்தி இதய நுண்துளை ரத்தக்குழாய் மூலம் சிங்கிள் சேம்பர் லீடு லெஸ் பேஸ்மேக்கர் என்ற மிகச் சிறிய நிரந்தர பேஸ்மேக்கர் கருவி மிகத் துல்லியமாக குறுகிய நேரத்தில் ரத்தக்குழாய் வழியாக இதயத்தில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது, லீடு லெஸ் பேஸ்மேக்கர் கருவி என்பது மிகவும் சிறிய வடிவம் கொண்டது, இதில் பேட்டரி கிடையாது, அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் மோகன், தீபக் நாராயணன், அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்







































Users Today : 17
Users Yesterday : 5
Total Users : 34467
Views Today : 25
Views Yesterday : 18
Total views : 65587
Who's Online : 0




