குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். இந்த குடியிருப்பில் கடந்த 12ந் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூச்சுத் திணறியும் உடல் கருகியும் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், இதில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராயும் ஒருவர் ஆவார், இந்நிலையில் தீ விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் பெண்கள் கண்ணீர் விட்டு அழுது, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டியும் அவர்களது புகைப்படத்துக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மௌன அஞ்சலி செலுத்தினர், இதில் அறக்கட்டளை செயலர் பிரபுராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்








































Users Today : 0
Users Yesterday : 1
Total Users : 34315
Views Today :
Views Yesterday : 2
Total views : 65267
Who's Online : 0




