தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஜுவல் என்ற வாலிபருக்கு உயர் தொழில்நுட்பம் மூலம் கை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர், வட மாநிலத்தை சேர்ந்த 27 வயதான வாலிபர் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் அவரது கை இயந்திரத்தில் சிக்கியது, இதில் அவரது வலது கையில் உள்ள எலும்புகள் மற்றும் சதை சிதைந்து அதிக ரத்தம் வெளியேறி செயலிழந்து விட்டது, இதையடுத்து அவரை மீட்டு காமாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து வந்தனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்,
இதையடுத்து எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் செந்தில்குமார் மற்றும் டாக்டர்கள் கிஷோர் குமார், மோகன், தீபக் நாராயணன் உள்ளிட்ட குழுவினர் வாலிபரின் கையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, சிதைந்து எலும்புகள் மற்றும் தசைகளுக்கு உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களை கொண்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர், அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது







































Users Today : 0
Users Yesterday : 1
Total Users : 34315
Views Today :
Views Yesterday : 2
Total views : 65267
Who's Online : 0




