தஞ்சாவூர் வல்லம் பிரிஸ்ட் நிகர் நிலை பல்கலைக் கழகத்தில்14 வது பட்டமளிப்பு விழா நவ 15ல் நடைபெற்றது., இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தர் பொன்னையா நாகேஸ்வரன் தலைமையில் மாநில வரித்துறை கூடுதல் ஆணையர், தேவேந்திர பூபதி
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
31 முனைவர் பட்டமும், 215 முதுகலை பட்டமும், 888 இளங்கலை பட்டமும் என மொத்தம் 1134 பட்டங்களை வழங்கி மாணவர்களது கல்வி, அறிவாக மாற வேண்டும் என்றும், அந்த அறிவு சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் என்றும் பேசினார், பின்னர் செய்தியாளர்களிடம் தேவேந்திர பூபதி கூறுகையில், சமூக ஊடகங்களில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் மாணவர்களுக்கு நிறைய இருக்கிறது, என்ன வேலைக்கு செல்ல வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்கிற வினாக்கள் எல்லாம் இன்றைக்கு உள்ளங்கையில் இருக்கக்கூடிய செல்பேசி மூலம் கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது, ஒரு சமுதாயத்தை மக்களை முன்னேற்றக் கூடிய கருவியாக பயன்பட வேண்டும் என்றும் வேளாண்மை படிப்பில் படித்து நிறைய பேர் குடிமைப் பணியில் தேர்வாகி அரசின் முக்கியமான பணிகளில் இருந்து வருகின்றனர், இன்றைக்கு சட்டத்தின் தேவை இல்லாத துறையே இல்லை என்று சொல்லலாம், சட்டப் படிப்பில் அதிக தேவை உள்ளது, ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு படிப்பிற்கும் ஒரு மோகம் உள்ளது, கலை மற்றும் கலாச்சாரத்தை எல்லோரும் படிக்கிறார்கள்,சமுதாய முன்னேற்றத்திற்கு கலையும் வரலாறும் மிக மிக முக்கியம், இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் வரி செலுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் உள்ளனர் என்றும் கூறினார், இவ்விழாவில் பல்கலைக்கழக தலைமை செயல் அதிகாரி முனைவர் வேங்கடா, துணைவேந்தர் முனைவர் கிறிஸ்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்






































Users Today : 1
Users Yesterday : 3
Total Users : 34366
Views Today : 1
Views Yesterday : 4
Total views : 65375
Who's Online : 1




