ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியாத இதய நுண் நாள ரத்த பாதிப்புகளை கண்டறிய நவீன தொழில்நுட்பம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை அறிமுகம்

8

இதய சிகிச்சையில் ஒரு முன்னோடி முயற்சியாக இதயத்தின் நுண் ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறியும் உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தை தஞ்சையில் மீனாட்சி மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது, கோரோவென்டிஸ்  கோரோபுளோ எனப்படும் இந்த நவீன நோயறிதல் முறையை முதன்முறையாக பயன்படுத்தி 4 நோயாளிகளுக்கு நுண் ரத்த நாள அடைப்புகள் மற்றும்  செயல்பாட்டு குறைபாடுகள் குறித்த துல்லியமான மதிப்பீட்டை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது, இது குறித்து மருத்துவமனையின் இதயவியல் சிகிச்சையில் முதுநிலை நிபுணரும் துறைத் தலைவருமான டாக்டர் கேசவமூர்த்தி கூறுகையில், ஒருவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை முடிவு முற்றிலும் இயல்பாக இருந்தாலும், நுண் நாள ஆஞ்சைனை அல்லது இரத்த நாள சுருக்கம் காரணமாக கடுமையான நெஞ்சுவலி அல்லது ரத்த ஓட்ட குறைபாடு ஏற்படலாம், இதனை கண்டறியாமல் விட்டால் இதயத் தசை பாதிப்பு, மாரடைப்பு, இதயச் செயலிழப்பு மற்றும் திடீர் மரணம் கூட ஏற்படலாம், இதய சிகிச்சையில் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம், வழக்கமான சோதனைகளில் தெளிவான விடை கிடைக்காத காரணத்தை விளக்க முடியாத நெஞ்சுவலி இருக்கும் நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும் என்றார், இதில் டாக்டர்கள் சபரி கிருஷ்ணன், சீனிவாசன், பிரவீன் ஆகியோர் உடன் இருந்தனர்