தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூரில் உள்ள பாரத் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்,
இக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாவாக, தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா
கீற்றால் பின்னப்பட்ட குடிசை வீட்டை அமைத்து, தென்னை ஓலைகள் கட்டி, வண்ண கோலமிட்டு, கரும்பு தோரணம் கட்டி, கிராமத்தையே கல்லூரி வளாகத்தில் அமைத்து கல்லூரி மாணவிகள் சேலை அணிந்தும், மாணவர்கள் வேஷ்டி,சட்டை அணிந்தும் பாரம்பரிய உடையில் வந்தனர், சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து, மண் பானையில் பச்சரியில் பொங்கல் வைத்து பால் பொங்கி வரும்போது பொங்கலோ, பொங்கல் என மாணவிகள் குழவை சத்தம் எழுப்பி உற்சாகம் அடைந்தனர், அதனைத் தொடர்ந்து கிராமிய பாடலுக்கு கும்மியாட்டம் ஆடி, திரைஇசை பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி, சாதி, மதம், பாகுபாடு இல்லாமல் மாணவ, மாணவிகள் சமுதாய பொங்கல் விழாவினை உற்சாகமாக கொண்டாடினார்கள், விழாவில் கல்லூரி செயலர் புனிதா கணேசன் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்