திமுக கட்சியின் காப்பாளர்களுக்கு பெரியார், அண்ணா, கருணாநிதி பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பெயரிலும், 2018 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் அன்பழகன் பெயரிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, திமுக தனது 75 ஆவது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் வகையில் கட்சியை ஆறாவது முறையாக ஆட்சியில் அமர வைத்து இந்தியாவே போற்றி வரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு முதல் வழங்குகிறது, இந்த ஆண்டுக்கான மு.க ஸ்டாலின் விருது தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, இதனால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.