இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன, மேலும் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது, இதனையடுத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் காவல்துறையினருடன் இணைந்து அண்ணாசாலை பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கூப்பன் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர், இதேபோல் தினமும் ஹெல்மெட் அணிந்து வரும் நபர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவன செயலாளர் பிரபு ராஜ்குமார் தெரிவித்தார்.

