அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் மேயரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சாவித்திரிகோபால், அமைப்பு செயலாளர் காந்தி, மாநகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகிய முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகத்துடன் பிறந்தநாள் விழாவினை கொண்டாடினர், முன்னதாக ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து காந்திஜி ரோடு வழியாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பேரணியாக ரயிலடி பகுதிக்கு வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அதேபோல் தெற்குவீதியில் கவுன்சிலர் கோபால் தலைமையில் நிர்வாகிகள் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர், இவ்விழாவில் நிர்வாகிகள் திருஞானம், பஞ்சாபிகேசன், புண்ணியமூர்த்தி, மனோகரன், சதிஷ்குமார், கவுன்சிலர் கேசவன், தெட்சிணாமூர்த்தி, காந்திமதி, வார்டு செயலாளர் சம்பத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்