தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளது ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது, இதில் தங்களது குழந்தைகளோடு சுமார் 50 பெற்றோர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்,உரிய காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளது பெற்றோர்கள் ஓரிடத்தில் சந்திக்கவும், கலந்துரையாடவும் மற்றும் குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது, தங்களது குழந்தைகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பதில் உள்ள சவால்களை சமாளிக்க இப்பெற்றோர்களுக்கு உதவுவதற்காக ஒரு ஆதரவு குழுவும் தொடங்கப்பட்டது, இதில் டாக்டர்கள் ரவிச்சந்திரன்,சக்திவேல்,ரேஷ்மா, சரவணவேல்,நிர்மலா ஆகியோர் பங்கேற்று பெற்றோர்களிடம் குறைப்பிரசவ குழந்தைகளை வளர்ப்பது மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்து விளக்கம் அளித்தனர், உலகளவில் ஒவ்வொரு 10 குழந்தைகளிலும் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 13.4 மில்லியன் குழந்தைகள் உரிய காலத்திற்கு முன்னதாகவே பிறக்கின்றன என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதைவிட அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள், அதாவது 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றனர் (பிறக்கும்போது 2.5 கி.கி. எடைக்கும் குறைவாக) பச்சிளம் குழந்தைகள் இறப்பில் மிக பொதுவான, பரவலான காரணமாக குறைப்பிரசவம் உருவெடுத்திருக்கிறது என்று டாக்டர் சக்திவேல் தெரிவித்தார்
