திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46 ஆவது பிறந்தநாள் வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூர் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் திமுக மாநகர கட்சி சார்பில் 130 பள்ளி மாணவர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி, முட்டை, சிக்கன் 65 ஆகியவை வழங்கப்பட்டது, அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு பள்ளி மாணவர்கள் கைதட்டி சைகை மொழியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர், இதில் திமுக எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம் மற்றும் மேயர் இராமநாதன் துணைமேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் இறைவன்,மேத்தா, உஷா புண்ணியமூர்த்தி, கனகவள்ளி பாலாஜி, கவுன்சிலர்கள் ரம்யாசரவணன், நீலகண்டன், லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கினார்கள், இதில் கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
