தஞ்சாவூரில் உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்தை அருந்தியதனால் இறப்பின் விளிம்பிற்கு சென்ற 31 வயதான இளம்வயது ஆண் நபரின் உயிரை தனது சிறப்பான சிகிச்சையின் மூலம் காப்பாற்றி உள்ளது, வேறொரு மருத்துவமனையில் மூன்று நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனளிக்காத காரணத்தால் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அந்நபர் மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு ஒரு மாத கால தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிசிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்த இந்நோயாளி இப்போது அவரது தினசரி பணி வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார், மீனாட்சி மருத்துவமனை விஷம் அருந்திய 1000க்கும் அதிகமான நபர்களுக்கு இதுவரை சிகிச்சை அளித்துள்ளது. 2023 ஜனவரி மாதத்திற்கு பிறகு 160 – க்கும் அதிகமான நபர்கள் விஷ முறிவிற்கான சிகிச்சையை இங்கு பெற்றிருக்கின்றனர். இதில் டாக்டர்கள் அரிமாணிக்கம், அருண், பிரவீன், செந்தில்குமார், சரவணவேல், இதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்