தஞ்சையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாநகராட்சி துணை மேயர், பொதுமக்கள் பாராட்டு

370

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் பள்ளி சீருடையில் 2 குழந்தைகளும், மேலும் 2 ஆண்களும் சாலையில் கிடந்தனர், அப்போது சாலையில் காரில் வீட்டுக்கு சென்ற தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி பள்ளி குழந்தைகளின் அழும் சத்தம் கேட்டு காரை திருப்பி வந்து காயத்துடன் வலியால் துடித்து கொண்டு இருந்த இரண்டு பள்ளி குழந்தைகள் மற்றும் அவரது தந்தையையும் மீட்டு அவர்களை தனது அரசாங்க காரில் ஏற்றி  பயப்படாமல் போங்கள் எனக் கூறி தனது உதவியாளரையும் துணைக்கு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தார்,மேலும் விபத்தில் சிக்கிய மற்றொருவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னர் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி  மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் தெரிவித்து விட்டு வீட்டுக்கு சென்றார். முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது, துணை மேயர் உடனடியாக தனது காரை அனுப்பி உதவி செய்ததற்கு பொதுமக்கள் அவரை பாராட்டினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 − = 26