தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொள்ளாமலும், குறுவை சாகுபடியினை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காமலும், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த திமுக அரசை கண்டித்தும், உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும், குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 35 ஆயிரம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர், பின்னர் திமுக அரசை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கட்சியினர் கோஷம் எழுப்பினர், பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறும்போது, கர்நாடக அரசிடம் உரிய காலங்களில் தண்ணீர் பெற்றுத்தர தவறியதால் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் கருகி போய்விட்டது, சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது, ஆகவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 35 ஆயிரம் இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டாதது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார், பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, அதிமுக அரசு டெல்டா விவசாயிகளை மனதில் வைத்துக் கொண்டு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாக அறிவித்தது மட்டுமல்ல, வறட்சி,புயல், வெள்ளம் வந்த போது ரூ 2,268 கோடி நிவாரணம் வழங்கியது என்று தெரிவித்தார், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர், மாநகர செயலாளர் சரவணன், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், அமைப்பு செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் திருஞானம், விவசாய பிரிவு துணை செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்