தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளியில் விளத்தூர் அரித்துவாரமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 250 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் 1968 ஆம் ஆண்டு ஜோதி என்ற பெண்மணி பயின்றுள்ளார்,இந்த நிலையில் தனது தாயார் ஜோதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மகன் பிரபுராஜ்குமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் பயின்ற அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ 3 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்குத் தேவையான பேன்,குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பாத்திரம்,பெட்ஷீட்,குடம் போன்ற பல்வேறு பொருட்களை பள்ளிக்கு கல்வி சீர்வரிசையாக வழங்கினார்,முன்னதாக பிரபு ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், பொதுமக்கள் அருகில் உள்ள கோவிலில் இருந்து தப்பாட்டம் முழங்க பூ,பழம் போன்றவை அடங்கிய சீர்வரிசை தட்டுகளுடன் பள்ளிக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தியிடம் ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் பிரபு ராஜ்குமார், கல்வி சீர் வரிசையை வழங்கினார். முன்னதாக கல்வி சீர்வரிசை எடுத்து வந்தவர்களுக்கு ஆரத்தி எடுத்து பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்,மேலும் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது, மேலும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

