தஞ்சாவூர் மீனாட்சி
மருத்துவமனையில் ப்ரோபோஸ்கிஸ் லேட்டரலிஸ் (PL) என்ற ஒரு அரிதான craniofacial anomaly பிரச்சனையால் அவதியுற்ற ஒரு 10 வயது சிறுவனுக்கு அதை அகற்றுவதற்கான ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்ட நிதியுதவியின் கீழ், இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது.
பிரதீப் என்ற இச்சிறுவனுக்கு அவனது பிறப்பிலிருந்தே வலது முன்னந்தலைப் பகுதியில் இருந்த வீக்கத்திலிருந்து சளி வெளியேற்ற பிரச்சனை இருந்து வந்தது. பல ஆண்டுகளாக இதனால் கடும் சிரமப்பட்ட இந்த இளம் நோயாளியை பரிசோதித்த இம்மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் அருண்குமார் இந்த சிறுவனின் முகத்தின் வலது முன்புற பகுதியில் PL என அழைக்கப்படும் Proboscis Lateralis இருப்பதை கண்டறிந்தார்.100,000 நபர்களில், ஒரு நபருக்கும் குறைவாகவே இது நிகழ்வதாக அறியப்படுவதால் இதுவொரு மிக அரிதான பாதிப்பே. பெரும்பாலும் இவை முகத்தின் மையக்கோட்டு பகுதியில் அமைந்திருக்கும். ஆனால், மிக அரிதான நேர்வுகளில் மையக்கோட்டுக்கு அடுத்து அவைகள் இருக்கக்கூடும். இந்த சிறுவனைப் பொறுத்தவரை அவனது முகத்தின் பாஸிஃபிரண்ட்டல் என்ற பகுதியோடு இது இணைந்திருந்தது
“Proboscises இன் அடிப்பகுதியில் வளர்ந்திருந்த இதனை முழுமையாக வெட்டி அகற்றுவதற்காக சிக்கலான ஒரு அறுவைசிகிச்சை இச்சிறுவனுக்கு செய்யப்பட்டது. இதில் டாக்டர்கள் காந்திராஜ், ஹரிமாணிக்கம், ஐசக் ரிச்சர்ட்ஸ், பிரவீன் மற்றும் மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்