முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை திமுக கட்சியினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்,
இதேபோல் தஞ்சாவூரில் திமுக கட்சி மத்திய மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான சந்திரசேகரன் தலைமையில் மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி முன்னிலையில் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், தஞ்சை ரயிலடி பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று கலைஞர் அறிவாலயத்தை சென்றடைந்தனர், பின்னர் அங்குள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அதனைத் தொடர்ந்து ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது, இதில் முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன் மற்றும் நிர்வாகிகள் மேத்தா, புண்ணியமூர்த்தி, கனகவள்ளி பாலாஜி, நீலகண்டன், உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்

