உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்,பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்

1005

தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும், இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இவ்விழா கடந்த 17ந்தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.இவ்விழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வந்தது, அதைப்போல் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள் (1.5.23) அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக அதிகாலை பெரியகோவிலிருந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர்,ஸ்ரீநீலோத்பலாம்பாள் ஸ்ரீதியாகராஜர்,ஸ்கந்தர்,ஸ்ரீகமலாம்பாள் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று தேரடியை வந்தடைந்தது. பின்னர் ஸ்ரீதியாகராஜசுவாமி, கமலாம்பாள் சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளி சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டு மங்கல இசைக்கருவிகள் முழங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருத்தேரினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் எஸ்பி ஆஷிஸ் ராவத், அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, மேயர் ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர், இதில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், துணை மேயர் அஞ்சுகம்பூபதி,பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, கவுன்சிலர்கள் கோபால்,மேத்தா தெட்சிணாமூர்த்தி, ஆடிட்டர் ரவிச்சந்திரன், இண்டாக் முத்துக்குமார், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர், இந்த தேரோட்டம் தஞ்சை நகரின் நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்து தேரடியில் நிலை நிறுத்தப்படும்