டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் வகையில் முதன்முதலாக இதய மின்னியங்கியல் மற்றும் இதய செயலிழப்பு கிளினிக் தொடக்கம்

356

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இதய மின்னியங்கியல் மற்றும் இதய செயலிழப்பு கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது, மாரடைப்புகள் உட்பட அவசர நிலை, இதய சிகிச்சை, இதய நாளம் தொடர்பான நோய் அறிதல், இதய வாழ்வு பழுது நீக்கல்கள், இதய செயலிழப்பு உட்பட அனைத்து வகை இதய நோய்களுக்கான சிகிச்சைகள், இதய அறுவை சிகிச்சைகள் ஆகியவை இந்த மின் இயங்கியல் மூலம் செய்யப்படுகிறது இதுகுறித்து இதயவியல் சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் கேசவமூர்த்தி கூறும் போது, மாரடைப்பும் இதய செயலிழப்பும் இதயத்தை பாதிக்கின்ற கடுமையான மருத்துவ நிலைகளாக உள்ளன, உரிய நேரத்திற்குள் இப் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நமது உடல் நலத்தை மிகக் கடுமையாக பாதிக்க கூடும், இதயத்திற்கு போதுமான அளவு ரத்த ஓட்டம் இல்லாத போது மாரடைப்பு ஏற்படுகிறது, உடலில் பல்வேறு உறுப்புகளுக்கு போதுமான அளவு ரத்தத்தை இதயத்தால் திறம்பட பம்பு செய்து அனுப்ப இயலாத நிலையே இதய செயலிழப்பு ஆகும், பேஸ்மேக்கர்கள் மற்றும் லூப் ரெக்கார்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும் நபர்களுக்கு அவை தொடர்பான முழுமையான சேவையை இந்த கிளினிக் வழங்குகிறது, இந்த சிகிச்சையின் மூலம் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் 80 சதவீதம் வரை பயன்பெறலாம் என்றும் தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் ஜெயபாண்டியன், சுரேஷ் பாபு, பிரவீன், சபரி கிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்