பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அதிமுகவைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என பால்வளத் தலைவர் காந்தி குற்றச்சாட்டு

617

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால்,எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, தலைமைக் கழக பேச்சாளர் வடமதுரை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பால்வளத் தலைவர் காந்தி பேசும் போது, ஓபிஎஸ்ஐ நீக்கி இதுவரை 9 மாதங்கள் ஆகிவிட்டது, இதுவரை விடியா அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம் கூட நடத்தாதவர்கள் புரட்சித்தலைவி அம்மாவைப் பற்றியும், புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றியும், அதிமுகவை பற்றியும் பேசுவதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த இயக்கத்தைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை, அவர் இந்த இயக்கத்திலும் இல்லை, இந்த இயக்கத்தை விட்டு சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் பாமக, தேமுதிக என எண்ணற்ற கட்சிகளுக்கு சென்று அரசியல் அனாதையானவர் என்றும் ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வியை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் நம்மை விட்டு பிரிந்த துரோகிகள் அதை வெற்றியாக கொண்டாடுகிறார்கள், வருகின்ற காலத்தில் அவர்களுக்கு தோல்வியை பரிசாக இபிஎஸ் கொடுப்பார் என்று தெரிவித்து பேசினார், இக்கூட்டத்தில் கவுன்சிலர் கோபால் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், கவுன்சிலர்கள் தெட்சிணாமூர்த்தி, காந்திமதி, 5வது வார்டு செயலாளர் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்