தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் மேலாண்மை துறையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 5ந் தேதி சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது, இந்த முகாமில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது, இதில் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களும் முகாமில் பங்கேற்கலாம், சுமார் 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் தருவதற்கு நிறுவனங்கள் தயாராக உள்ளன, இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர் gunasekharms@equitastrust.org அல்லது somjobfair@sastra.ac.in என்ற இமெயிலுக்கு தங்கள் பெயர், கல்வி தகுதி, வயது, அலைபேசி எண்,இமெயில் முகவரி, வீட்டு முகவரி ஆகியவற்றை அனுப்பலாம், மேலும் விவரங்கள் அறிய 04362-264101- 264119( extn)2705 என்ற சாஸ்திரா பல்கலைக்கழக தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 8754542234 என்ற அலைபேசி எண்ணுக்கோ அழைத்து விபரங்கள் தெரிந்து கொள்ளலாம், முகாமில் பங்கேற்பவர்கள் தங்கள் சுயவிபர பட்டியல், கல்வி சான்றிதழ்கள், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என சாஸ்திரா பல்கலைக்கழக மேலாண்மை துறை மற்றும் பயிற்சி வேலைவாய்ப்புத் துறை டீன் டாக்டர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்