முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா அதிமுக கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது,அதைப்போல் தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவ சிலைகளுக்கு அதிமுக(இபிஎஸ்) அணி சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர், மேலும் வரும் ஆண்டுகளில் இபிஎஸ் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம் என்றும் தெரிவித்தனர், இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கோபால், காந்திமதி தெட்சிணாமூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,அதைப்போல் தஞ்சை தெற்குவீதியில் கவுன்சிலர் கோபால் ஏற்பாட்டில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் ஆகியோர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர், இதில் வார்டு செயலாளர், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்