பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அண்ணாவின் உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

576

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின்  முழு உருவ சிலைக்கு அதிமுக(இபிஎஸ் அணி) சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், பால்வளத் தலைவர் காந்தி,நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து மௌன அஞ்சலி செலுத்தினர், இதில் கவுன்சிலர்கள் கோபால், தெட்சிணாமூர்த்தி, 5வது வார்டு செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், அதேபோல் அதிமுக (ஓபிஎஸ் அணி) சார்பில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, சாமிநாதன், சண்முக பிரபு, ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து மௌன அஞ்சலி செலுத்தினர்.