தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழில் கல்வியை கற்கவும், தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாக்கவும்,தஞ்சை மாவட்ட தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் மூன்றாவது கருத்தரங்க மாநாடு தஞ்சாவூர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் நடைபெற்றது,பேரூர் சாந்தலிங்க அடிகள் மடத்தின் தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மாநாட்டிற்கு தலைமை வகித்தார், இம்மாநாட்டில் மருத்துவர் நரேந்திரன் எழுதிய தமிழ் வழிக் கல்வி கனவா? நனவா? என்ற நூல் வெளியிடப்பட்டது, நூலை மருத்துவர் இளங்கோவன் பெற்றுக் கொண்டார், நூலை வெளியிட்டு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையுரை ஆற்றினார்,மாநாட்டின் நோக்கம் குறித்து மருத்துவர் நரேந்திரன் விளக்கி பேசினார்.சென்னை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சிறப்பு நிலை பேராசிரியர் முது முனைவர் மருதநாயகம் சிறப்புரையாற்றினார்.கருத்தரங்க இரண்டாம் அமர்வில் உலக நாடுகளில் தமிழ் வழி கல்வி என்ற தலைப்பில் திருச்சி அருள் முனைவர் அமுதன் அடிகளார்,தமிழ் வழிக் கல்வியும் போராட்டமும் என்ற தலைப்பில் தமிழியக்கம் இணைச் செயலாளர் இளமுருகன் ஆகியோர் உரையாற்றினர், மூன்றாம் நிகழ்வில் தமிழ் வழி கல்வி சிக்கலும் தீர்வுகளும் என்ற தலைப்பில் குறிஞ்சி அவர்களும், தமிழ் வழிக் கல்வியும் தமிழறிஞர்களின் எதிர்காலமும் என்ற தலைப்பில் முனைவர் காமராசன் அவர்களும் உரையாற்றினர், நிறைவு விழாவில் தமிழ் இயக்கம் பொதுச்செயலாளர் முனைவர் திருமாறன் தலைமை வகித்தார். திருவையாறு ஔவைக்கோட்டம் கலைவேந்தன், திருக்குறள் பேரவை நிர்வாகி புலவர் கந்தசாமி, பேராசிரியர் பெரியசாமி ஆகியோர் உரையாற்றினர், தாமரை இதழின் ஆசிரியர் சி.மகேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். முன்னதாக பேராசிரியர் பாரி வரவேற்றார், பேராசிரியர் கண்ணதாசன் நன்றி தெரிவித்தார், இம் மாநாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழில் பயிற்று மொழியாக வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்,தமிழ் வழி மருத்துவக் கல்லூரியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏஐடியுசி மதிவாணன், மதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், துரைசிங்கம், கல்லூரி நிர்வாகி விடுதலை வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்