தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் 27 ந் தேதி அன்று நடைபெற்றது, இதில் அதிமுக கவுன்சிலர் கோபால் கலந்து கொண்டு தேரோடும் ராஜவீதிகளில் கழிவுநீர் சாக்கடைகளில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாகவும் தெரிவித்தார், இதனையடுத்து மேயர் ராமநாதன் 28ந் தேதி அன்று அந்த வார்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்தார், அப்போது பல இடங்களில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது,மேலும் ஸ்மார்ட் சிட்டி வேலை முழுமையாக முடிக்கப்படாமலும் இருந்தது, இதையடுத்து இப்பணிகளை வரும் மார்ச் மாதத்திற்குள் விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தார், இந்த ஆய்வின்போது கவுன்சிலர்கள் கோபால் மேத்தா உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்