தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக,திமுக சார்பில் வீரவணக்கம்

495

மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன்,கீரனூர் முத்து, ராசேந்திரன்,சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது இன்னுயிரினை இழந்துள்ளனர், இவர்களுக்கு ஆண்டுதோறும் திமுக மற்றும் அதிமுக கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது, இதனையடுத்து திமுக சார்பில் எம்பி
பழநிமாணிக்கம் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது, இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ சந்திரசேகரன், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் , துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி மற்றும் கவுன்சிலர் தமிழ்வாணன், மாணவரணி அமைப்பாளர் செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மாலையில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது, அதைப்போல் அதிமுக இபிஎஸ் அணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் பால்வளத் தலைவர் காந்தி தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், முன்னிலையில் நடைபெற்றது, இதில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சேதுராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் இக்கூட்டத்தில் கவுன்சிலர் கோபால், கரந்தை பஞ்சாபிகேசன், கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, 5வது வார்டு செயலாளர் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்