முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக (இபிஎஸ் அணி) சார்பில் தஞ்சையில் நடைபெற்றது, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆவின் தலைவர் காந்தி முன்னிலையில் மாநில சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் மதுரை பாண்டியன், பேராவூரணி திலீபன் மற்றும் கும்பகோணம் முன்னாள் எம்எல்ஏ ஆசைமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள், அப்போது வரும் 2024 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் தமிழகத்திற்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது, மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவார், திமுகவினர் அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என்று பேசினர், இக்கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் கோபால், நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, மனோகர், கரந்தை பஞ்சாபிகேசன், பேச்சாளர் கண்ணன், கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, 5வது வார்டு செயலாளர் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்