முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவன தலைவருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா அதிமுக மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது,
இதனையடுத்து தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு அதிமுக கட்சி (இபிஎஸ் அணி) சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆவின் தலைவர் காந்தி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதில் கவுன்சிலர் கோபால், ராஜமாணிக்கம், பஞ்சாபிகேசன், கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி,5வது வார்டு செயலாளர் சம்பத்,பேச்சாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் அதேபோல் அதிமுக (ஓபிஎஸ் அணி) சார்பில் பகுதி செயலாளர்கள் அறிவுடை நம்பி, சாமிநாதன், சண்முகபிரபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அப்போது அறிவுடைநம்பி பேசும்போது அதிமுக கட்சி ஒன்றிணையும், வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் அதிமுக வெற்றி பெற அனைவரும் அயராது பாடுபட உறுதி ஏற்போம் என தெரிவித்தார், அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், செந்தில்குமார், கவுன்சிலர் கண்ணுக்கினியாள் உள்ளிட்ட நிர்வாகிகள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்