தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 10ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம், பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு

1042

டெல்டா மாவட்டங்களில் மிகப் பிரபலமாக இயங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவ சேவைகளை அளித்து வருகிறது,அதன்படி இம்மருத்துவ மனையின் 10ம் ஆண்டு நிறைவு முன்னிட்டு பொதுமக்களுக்கு 10 அறக்கொடை திட்டங்களை அறிவித்துள்ளது, அதன்படி ஜனவரி 10  முதல் 20 ந்தேதி வரை ஆஞ்சியோகிராம் பரிசோதனை ரூ 10000 என்ற சிறப்பு கட்டணத்தில் கிடைக்கும்,பத்து பரிசோதனைகளின் தொகுப்பு ரூ 1000 என்ற சிறப்பு கட்டணத்தில் கிடைக்கும், மற்றும் ஜனவரி 14 அன்று ஒரு நாளுக்கு மட்டும் ரூ 10 என்ற கட்டணத்தில் அனைத்து வெளிநோயாளி பிரிவு மருத்துவ ஆலோசனை கிடைக்கும், மேலும் மருத்துவமனையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள இடங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் பிக்கப் மற்றும் ட்ராப் வசதி வழங்கப்படும், ஜனவரி 13 அன்று பிறக்கும் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும், மேலும் ஜனவரி 20 முதல் 30 வரை வெளி நோயாளி பிரிவு சார்ந்த அனைத்து பரிசோதனைகளுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும், அடுத்த 10 மாதங்களில் பொதுமக்களில் 10000 நபர்களுக்கு அடிப்படை உயிர்காப்பு சிகிச்சை பயிற்சி அளிக்கப்படும் என்று மீனாட்சி மருத்துவமனை தலைவர் டாக்டர்
குருசங்கர் தெரிவித்துள்ளார்,இதில் டாக்டர் பாலமுருகன் டாக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்