தஞ்சாவூரில் சமுதாய நாற்றங்கால் தோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விதைகள் நட்டு துவக்கி வைத்தார்

621

தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை மற்றும் வனப் பரப்பை அதிகரிப்பதற்காக  விருட்ச்சவனம், மாவட்டம் முழுமையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, வீட்டுக்கு ஒரு விருட்சம், ஏரி குளங்களில் பறவைகள் வனம், ஆற்றுப்படுகையில் இயற்கை வனம், கடற்கரை பகுதிகளில் ஆழி வனம், பேரூராட்சிகளில் வளம் மீட்பு வனம், கிராமப்புறங்களில் ஊருக்கு ஒரு வனம் என தொடர்ச்சியான திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பான பணிகள் நடந்து வருகின்றன,அதன்படி ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் தஞ்சாவூர் சிட்கோ வளாகத்தில்  சமுதாய நாற்றங்கால் தோட்டம் ஏற்படுத்தும் திட்டத்தினை விதைகள் நட்டு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார், இந்த நாற்றங்கால் தோட்டத்தில் வேம்பு, தேக்கு, புங்கை, இலுப்பை, வாகை, வாதாம், புலி, மருது, பூவரசு, விளாம், நாவல், மா, பலா, நெல்லி  போன்ற பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தினை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக்குழு மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் ஆகியவை இணைந்து செயல்படுத்தி வருகிறது.இந்நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர். வரதராஜன், துணை சேர்மன் பொறியாளர். முத்துக்குமார்,லயன் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர்  முகமது ரபி, மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து, ஜூனியர் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர். பிரகதீஷ்,  போக்குவரத்து இன்ஸ்பெக்டர்  ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்