தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கம், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம், மற்றும் இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் தஞ்சை சீனிவாசபுரம் லட்சுமி நாராயணா தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது, இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் தஞ்சை எம்பியுமான எஸ்எஸ் பழநிமாணிக்கம் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார், காவேரி லயன்ஸ் சங்கத் தலைவர் முருகப்பன் தலைமையில் திட்ட இயக்குனர் முகமது ரபி மற்றும் வார்டு கவுன்சிலர் தமிழ்வாணன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சிவசண்முகசுந்தரம், ராதாகிருஷ்ணன் மனோகர் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், இம் முகாமில் கிட்ட பார்வை, தூரப் பார்வை, கண் நீர் அழுத்த நோய், விழித்திரை பாதிப்பு ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது