தஞ்சாவூரில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு

473

தஞ்சை மாவட்ட காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தஞ்சை ரயிலடி பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த விழிப்புணர்வில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார், பஸ் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் வகையில் வாகனங்களின் முன்புற முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டினர் மேலும் இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளையும் விளக்கி கூறினர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தப்பாட்ட கலைஞர்கள் தப்பாட்டம் ஆடியபடி பொதுமக்களை ஈர்த்தனர்,இந்நிகழ்ச்சியை தொண்டு நிறுவன செயலாளர் பிரபுராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்