எல்ஐசியில் ஆன்லைன் வர்த்தகம் வணிகத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஹைதராபாத்தில் எல்ஐசி முகவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம்

677

எல்ஐசி முகவர்கள் (லிக்காய்) சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் ஐஆர்டிஏ (IRDA) தர்ணா போராட்டம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது, முன்னாள் எம்பியும் சிஐடியு அகில இந்திய துணை தலைவருமான பாசுதேவ் ஆச்சார்யா தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார், இந்த போராட்டத்தில் எல்ஐசியில் ஆன்லைன் வர்த்தகம், நேரடி வணிகத்தை கைவிட வேண்டும், பீமா சுகம் செயலியை அமுல்படுத்த கூடாது, முகவர்கள் கமிஷன் குறைப்பு கைவிட வேண்டும், தனியார்மய கொள்கையை கைவிட வேண்டும், ஜிஎஸ்டி வரியை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர், முன்னதாக கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு பேரணியாக சென்றனர், இந்த போராட்டத்தில் லிகாய் அகில இந்திய துணை தலைவர் மஞ்சுநாத், லிகாய் அகில இந்திய பொதுச் செயலாளர் திலீப், தமிழ்மாநில தலைவர் பூவலிங்கம், மாநில பொதுச் செயலாளர் கலாம், மாநில செயலாளர் ராஜா, தஞ்சை கோட்ட நிர்வாகிகள் வேலுச்சாமி, கோபாலகிருஷ்ணன், தங்கமணி, அன்பு நடராஜன், சம்பத், மற்றும் சிஏபி கிளை நிர்வாகிகள் வேளாங்கண்ணி, ராஜேந்திரன், ரமேஷ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டனர்