தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு விண்ணப்பிக்கவும்

1342

தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு (34 ஆண் 1 பெண்) தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது, இத்தேர்வில் தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்களும் பட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்களும் மட்டுமே கலந்து கொள்ளலாம், இத் தேர்விற்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 14.10.22 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வழங்கப்படும், ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார் கார்டு நகல்கள் ஆகியவற்றுடன் இணைத்து வரும் 17.10.22 அன்று காலை 6 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் (பழைய கோர்ட் ரோடு) நடைபெறும் உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வில் கலந்து கொள்ளலாம், தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அசல் கல்வி சான்றிதழ்கள் அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும், தகுதிகள் வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை, கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஆண்கள் உயரம் 167 செ.மீ, பெண்கள் உயரம் 157 செ.மீ, ஆண்கள் மார்பளவு 81-86 செ.மீ, உடற்தகுதி தேர்வு ஆண்/பெண் 100 மீட்டர் ஓட்டம்,நீளம் தாண்டுதல் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா கந்தபுனேனி தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

52 − = 46