தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 

733

மேட்டூர் அணையிலிருந்து கடந்த 24 ந் தேதி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார், மேட்டூரில் திறந்து விடப்பட்ட  தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை 2 நாட்களுக்கு பிறகு வந்தடைந்தது இதனையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை அரியலூர் கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது இதில் அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ், எம்பி பழநிமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு காவிரி ஆற்று மதகு பொத்தானை அழுத்தி விதை நெல்லை தூவி தண்ணீரை திறந்து வைத்தனர், இந்நிகழ்ச்சியில்   மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,  எம்எல்ஏ சந்திரசேகரன் மேயர் ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + = 15