உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம்

1313

தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இவ்விழா கடந்த 30ந்தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கி தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது, இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதனன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை பெரியகோவிலிருந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளிதெய்வானை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீநீலோத்பலாம்பாள் ஸ்ரீதியாகராஜர், ஸ்கந்தர்,ஸ்ரீகமலாம்பாள் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று தேரடியை வந்தடைந்தது. பின்னர் ஸ்ரீதியாகராஜசுவாமி, கமலாம்பாள் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட திருத்தேரில் எழுந்தருளி சிறப்பு மஹாதீபாரதனை காட்டப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருத்தேரினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,சூரியனார் கோவில் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, காவல் எஸ்பி ரவளிப்பிரியா முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் செயல் அலுவலர் அரவிந்தன் கண்காணிப்பாளர் ரெங்கராஜன், கவுன்சிலர்கள் கோபால் மேத்தா இண்டாக் முத்துகுமார் மற்றும் நகரத்தார் சங்க நிர்வாகிகள் பொறியாளர் முருகப்பன் முத்துக்குமரன் லெட்சுமணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீதியாகராஜ சுவாமி கமலாம்பாள்