தனியார் துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

801

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,ஆகியவை இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 10.04.2022 (ஞாயிறு) அன்று ஸ்-சலாம் பொறியியல் கல்லூரி, ஆடுதுறையில் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெற உள்ளது. இம்முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதிகளுக்குரிய வேலைநாடுவோருக்கு 1000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை அளிக்க உள்ளனர். இம்முகாமில் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சேர்ப்பும் நடைபெறுகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனையும் மற்றும் சுயத்தொழில் தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின்; நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம், பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − = 68