இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உதவித்தொகை, விண்ணப்பிக்கவும்

2148

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2021-2022 நிதியாண்டில் புதிதாக விண்ணப்பித்து பயனடைவதற்கு இரண்டு பெண்குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களது இரண்டாவது குழந்தை பிறந்து 3 வயதிற்குள் இ சேவை மையத்தில் இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பிக்க இ சேவைமையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் (1)குடும்ப அட்டை நகல் (2)ஆதார் அட்டை நகல் (3) சாதி சான்று நகல் (4) வருமான சான்று நகல் (5) இருப்பிட சான்று நகல் (6) தந்தையின் கல்வி மாற்று சான்று நகல் (TC) (7) தாயாரின் கல்வி மாற்று சான்று நகல் (TC) (8) குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை சான்று நகல் (9) ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று நகல் (10) குடும்ப புகைப்படம் (11)குழந்தைகளின் பிறப்பு சான்றுகள் அசல் மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வைப்புத்தொகை ரசீது (Deposit Bond) பெற்று, 18 வயது முதிர்வடைந்த அனைத்து பயனாளிகளும் முதிர்வு தொகை பெறுவதற்கும், மேலும் விவரங்களுக்கும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர் (MS), மற்றும் மகளிர் ஊர் நல அலுவலர் (GS) அவர்களை அணுகி முதிர்வு தொகை கோரி விண்ணப்பித்து பயன்பெறுமாறும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்