தஞ்சாவூர் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

2299

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட உள்ளது, இதை பெறுவதற்கு கீழ்க்கண்ட தகுதிகள் பெற்றிருக்க வேண்டும், ✍தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் மற்றும் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், ✍ஆண்டு வருமான உச்சவரம்பு ஒரு லட்சமாக இருத்தல் வேண்டும் ✍வயதுவரம்பு 20 முதல் 45 வரை ✍கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் ✍ஒருமுறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவர் ஆவார் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து உரிய விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

80 − = 73