முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, தஞ்சாவூரில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

1199

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர், அதேபோல் தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் ஆவின் தலைவர் காந்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர், மேலும் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தஞ்சை 23 வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி அன்னதானமும் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி புண்ணியமூர்த்தி ரமேஷ் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர்கள் கோபால், மணிகண்டன்,சரவணன்,காந்திமதி தெட்சிணாமூர்த்தி,கேசவன்,கலையரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்