தஞ்சாவூர் மாவட்ட மாணவர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி வரும் நவம்பர் 16ந் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது, இந்த முகாமில் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் வித்யாலெட்சுமி வெப்சைட்டில் (www.vidyalakshmi.co.in) பதிவு செய்து இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்