தஞ்சாவூரை சேர்ந்த குணசேகரன் சாந்தி இவர்களின் மகள் தேவஸ்ரீ(14) இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்ரீ 1330 திருக்குறளையும் முழுமையாக படித்து திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தி தனது வீட்டில் தினந்தோறும் திருக்குறளை பலகையில் எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார், இதனையடுத்து பல்வேறு பாராட்டு சான்றிதழ்களையும் தேவஸ்ரீ பெற்றுள்ளார், இந்நிலையில் இந்த செய்தியினை இணையதளத்தில் பார்த்த ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் தங்களது குழந்தைகளும் திருக்குறள் பயிலுவதற்கு தேவஸ்ரீயை தொடர்பு கொண்டு இணைய தளம் மூலம் தற்போது திருக்குறள் பயின்று வருகின்றனர், இந்நிலையில் மாணவி தேவஸ்ரீயின் பிறந்த நாள் கடந்த 2 ந் தேதி ஆகும் மேலும் ஆசிரியர் தினம் 5 ந் தேதி கொண்டாடப்பட்டது, இதனையடுத்து தனது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியா குழந்தைகள் மற்றும் தன்னுடன் திருக்குறள் பயின்ற மாணவர்களை அழைத்து அவர்கள் 1330 திருக்குறள்களையும் மனப்பாடமாக முற்றோதல் செய்து திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி தனது ஆசிரியர்களை கெளரவப்படுத்தி திருவள்ளுவர் சிலை முன்பு கேக் வைத்து அதனை வெட்டி பிறந்த நாள் விழாவினை கொண்டாடினர் இந்த நிகழ்ச்சி அப்பகுதியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது