ஒன்னரை வயது சிறுமியை காப்பாற்ற பெற்றோர்கள் பாசப் போராட்டம்

1511

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் எழிலரசி தம்பதியினர், இவர்கள் இருவரும் தஞ்சாவூரில் உள்ள தனியார் நிதி நிறுவன வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர்  இவர்களது மகள் பாரதி ஒன்றரை வயது முடிந்துவிட்ட நிலையில் சிறுமி தானாக எழுந்து நிற்கமுடியாமல் தவழ்ந்த நிலையிலேயே உள்ளார், இதனையடுத்து அவர்களது பெற்றோர் வேலூர் மருத்துவ மனையில் அந்த சிறுமிக்கு ஜூலை மாதம் டெஸ்ட் எடுத்தனர்,அதற்கான ரிசல்ட் கடந்த வாரம் கிடைத்தது அதில் அந்த சிறுமிக்கு spinal muscular atrophy type 2 எனப்படும் முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது, இது ஒரு அரிய வகை மரபணு கோளாறு ஆகும், இதற்கு ஜீன் தெரபி ஒன்றே தீர்வாகும், இதற்கான zolgensma என்ற  அரிய மருந்து  அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமென டாக்டர்கள் தெரிவித்துள்ளனர், இந்த ஊசி மருந்தின் விலை ரூ 16 கோடி ஆகும் அதை இறக்குமதி செய்ய வரி ரூ 6 கோடி ஆக மொத்தம் 22  கோடி செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர், இந்த ஊசி இன்னும் இரண்டு மாதங்களில் குழந்தைக்கு செலுத்தப்பட வேண்டும் இல்லை எனில்  சிறுமிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சுவாச  பிரச்சினைகள் ஏற்படலாம் என சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர், சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அச்சிறுமியின் பெற்றோர் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்,கோடிக் கணக்கான அளவில் பெரிய தொகையை தங்களால் கொடுக்க இயலாது என்றும் அரசாங்கத்தால் தான் உதவ முடியும் எனவே இந்த விலை உயர்ந்த அரிய ஊசி மருந்தை தமிழக அரசு மற்றும் . மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து வரவழைத்து சிறுமியின் உடல் நலத்தை காப்பாற்ற உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர்.