தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை அதிமுக எம்பியாக பரசுராமன் பதவி வகித்தார்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்,திமுக முன்னாள் அமைச்சர் டிஆர் பாலுவை 2014ம் ஆண்டு எம்பி தேர்தலில் தோற்கடித்த பெருமை பரசுராமனை சேரும் தஞ்சை புதிய பேருந்து நிலையம் ரகுமான் நகரில் வசித்து வரும் அவர் அதிமுகவில் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் மற்றும் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார் தஞ்சை மாவட்ட அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராகவும் விசுவாசியாகவும் இருந்துள்ளார் மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் உள்ளது இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் தமிழக அரசையும் கடந்த 22ந் தேதி பாராட்டி பேசினார் அப்போதே அவர் திமுகவில் இணைய போவதாக செய்திகள் வெளிவந்தன தமிழக முதல்வரை பற்றி பேசுகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டையும் தமிழக அரசின் செயல்பாட்டையும் பாராட்டி பேசினார் மேலும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார், இது குறித்து அதிமுக சார்பில் எந்த கருத்தும் கூறப்படவில்லை மேலும் கடந்த 28ந் தேதி நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்பாட்டத்திலும் இவர் பங்கேற்கவில்லை, இந்நிலையில் 29 ந் தேதி அன்று திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரனை திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து பேசியுள்ளார், இந்த சந்திப்பால் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளாரா என்று கேள்வி எழுந்துள்ளது,முன்னாள் அதிமுக எம்பியாக இருந்து தற்போது திமுகவிடம் இணைய இருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இவருடன் இவரது ஆதரவாளர் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பாஸ்கர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் இவருடன் சென்றுள்ளனர், இந்த சந்திப்பு தஞ்சை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது