ரூ 2000 உதவி தொகை +2 படித்தவர்களுக்கு வாய்ப்பு

3525

தமிழ் படிக்க தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாதம்தோறும் ரூ.2000/- உதவித்தொகை +2 படித்தவர்களுக்கு வாய்ப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் மாதந்தோறும் ரூ.2000/- ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இப்படிப்பில் சேர்வதற்கு +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டாண்டு முதுகலைத் தமிழ்ப் படிப்பிற்கும் மாதந்தோறும் ரூ.2000/- ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட படிப்புகள் மட்டுமின்றி ஒருங்கிணைந்த ஐந்தாண்டு வரலாறு படிப்பினை +2 தேர்ச்சி பெற்றவர்கள் படிக்கலாம்.மேலும் முதுகலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் மொழியியல் மெய்யியல் நிகழ்த்துகலை மற்றும் சுற்றுசூழல் மூலிகை அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் http://www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் என்று துணைவேந்தர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 4 =