இலவச கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கவும்

1906

தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் கல்வி உதவி திட்டத்தின் கீழ் தாய் தந்தை இல்லாத, உடல் ஊனமுற்ற ஆதரவற்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை எளிய மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையை தொடர்ந்து வழங்கி வருகிறது அதைப்போல் இந்தாண்டும் கல்வி உதவித் தொகை கொரனோ தொற்று காலத்தில் இரவு பகலாக உழைத்து வரும் தூய்மைப் பணியாளர்கள், மயானப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் இதர முன்களப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க முன்னுரிமை அளித்து கல்வி உதவித்தொகை தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளது இதற்கு தகுதி உள்ள மாணவர்கள் www.motherteresafoundation.org என்ற இணையதளத்தின் மூலமாக மற்றும் கீழே உள்ள QR கோடு ஸ்கேன் செய்தும் விண்ணப்பித்து பயன் பெறலாம், விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து தெரிவித்துள்ளார் தொடர்பு எண் 8012570030,7339357818

https://tinyurl.com/7c54pdwz

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

74 − 72 =