தஞ்சை பெரியகோவில் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் திருக்கல்யாண மகோத்ஸவம்

1650

தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோவிலில் ஆனிமாதம் ஆண்டுதோறும் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெறும், ஆனால் இந்தாண்டு கொரனோ தொற்று தடுப்பு நடவடிக்கையால் கோவில் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாருமின்றி கோவில் அலுவலர்கள் சிவாச்சாரியார்கள் மட்டுமே இருந்த நிலையில் எளிய முறையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு ஸ்ரீபெரியநாயகி அம்மன் பெருவுடையாருக்கு மாலை மாற்றி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று பட்டு சேலை பட்டு வேட்டி அணிவித்து மாங்கல்ய வைபோகம் விமரிசையாக நடைபெற்று மஹா சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது, இத்திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றால் திருமணத்தடை, ஸர்பதோஷம், சந்தான பிராப்தி,நீண்ட ஆயுள், மாங்கல்ய தோஷம் நீங்கி உலக மக்கள் நலம் பெறுவர் என்பது ஐதீகம்