மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார், மேட்டூரில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது இதனையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை அரியலூர் கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது இதில் அமைச்சர்கள் பன்னீர் செல்வம், கே.என் நேரு, அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், மா.சுப்ரமணியன் சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு காவிரி ஆற்று மதகு பொத்தானை அழுத்தி விதை நெல்லை தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்,இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா கோவி.செழியன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் டிகேஜி நீலமேகம் துரை சந்திரசேகரன் அசோக்குமார் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்