தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஆய்வு

1125

தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி ரூ 6510.50 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது தஞ்சாவூர் மாவட்டத்தில் 185 பணிகள் ரூ 2050.05 மதிப்பில் நடைபெறுகிறது இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு ஆய்வுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்லணையை பார்வையிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த தூர் வாரும் பணிகளின் புகைப்படங்களை பார்வையிட்டு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார் இதில் அமைச்சர்கள் துரைமுருகன் கே என் நேரு அன்பில் மகேஷ் மற்றும் எம்பி பழநிமாணிக்கம் கொறடா கோவி செழியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், அதைப்போல் தஞ்சாவூரை அடுத்த பள்ளியக்ரஹாரம் கிராமத்தில் உள்ள வெண்ணாற்றில் ரூ 17 லட்சம் செலவில் மண் திட்டுகளை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார் இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்