தந்தையின் நினைவு தின சேமிப்பு பணத்தை தானம் செய்த சிறுமி

1246

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்த திருநீலகண்டன் – பாக்கியலட்சுமி தம்பதியின் மகள் சாம்பவி, அப்பா திருநீலகண்டன் நான்கு ஆண்டுகளுக்கு முன் மின் விபத்தில் இறந்தார். அம்மா பாக்கியலட்சுமி தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2018ல் கஜா புயலின் போது இவரது தென்னை மரங்கள் சேதமடைந்தன. இதற்காக தமிழக அரசு 1.50 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியது.இந்த நிதியை பாக்கியலட்சுமி பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கைப்பந்து மைதானம் அமைத்து கொடுத்தார். இதற்காக கலெக்டர் கோவிந்தராவ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.இந்நிலையில் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சாம்பவி, தன் தந்தையின் நினைவு தினத்தில் ஆதரவற்றோருக்கு உதவி செய்து வந்துள்ளார் இதற்காக தான் சேமித்து வைத்திருந்த 8,300 ரூபாயை, கொரோனா நிவாரண நிதிக்காக கலெக்டர் கோவிந்தராவிடம் வழங்கினார். தாயை போல் மகளும் பிறருக்கு உதவி செய்ததை கலெக்டரும், மற்றவர்களும் பாராட்டினர்.